ஈரோடு: அந்தியூர் அருகே தனது பேச்சை மீறி காதலனுடன் திருமணம் செய்துகொள்ள மகள் சென்றதை ஏற்க முடியாமல் கோசலை (45) வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். கோசலையின் மகன் பிரதீவ்ராஜ் அளித்த புகாரில் தற்கொலைக்கு தூண்டியதாக திவ்யா அவரது காதலன் கதிர்வேல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
