×

30 அடி பள்ளத்தில் தவறி விழுந்து டி.வி. மெக்கானிக் பலி

 

குன்னூர், ஜூலை 2: நீலகிரி மாவட்டம் கூடலூர் நந்தட்டியை சேர்ந்தவர் ரத்தீஷ் (46). டிவி மெக்கானிக். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். இவர் குன்னூர் மோர்ஸ்கார்டனை சேர்ந்த சிவக்குமார் (60) என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து இதே பகுதியில் கடை நடத்தி வந்தார். சிவக்குமார் குன்னூர் அருவங்காடு தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இதற்கான பாராட்டு விழா நேற்று முன்தினம் அவரது இல்லத்தில் நடந்தது. இதற்காக உறவினர், நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதில் ரத்தீசும் கலந்து கொண்டார். அப்போது ரத்தீஷ் மது அருந்தியுள்ளார். அப்போது வீட்டின் முன் இருந்த 30 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த ரத்தீஷ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். விழாவுக்கு வந்திருந்தவர்கள் அவரை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ரத்தீஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று பிரேத பரிசோதனைக்கு பின்னர் ரத்தீசின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச்சென்று இறுதி சடங்கை நடத்தினர்.

Tags : T. ,Gunnar ,Ratish ,Koodalur Nanthati, Neelgiri District ,Shivakumar ,Gunnar Morskardon ,
× RELATED அழகர் மலையில் குட்டியுடன் கரடி உலா