பெங்களூரிலிருந்து சென்னைக்கு காரில் கடத்திய 200 கிலோ குட்கா பறிமுதல் : ராஜஸ்தான் வாலிபர் கைது

 

திருத்தணி, ஜூன் 30: பெங்களூரிலிருந்து சென்னைக்கு காரில் கடத்தப்பட்ட 200 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, ராஜஸ்தானை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லை பகுதியில் அமைந்துள்ள திருத்தணி வழியாக குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஐஜி மற்றும் தனிப்படை உதவி காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் நேற்று சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆற்காடு குப்பம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, திருத்தணி பகுதியிலிருந்து சென்னை நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டதில் 200 கிலோ குட்கா சென்னைக்கு கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த குட்காவை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சங்காராம் (28) என்பவரை கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சங்காராமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Related Stories: