சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: முதலமைச்சர் விஜய் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் எனும் பெயரில் ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்திருப்பதாகவும், பொது விநியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் அரிசியை பயன்படுத்தி அதனை நலத்திட்ட உதவிகள் எனும் பெயரில் அவர்களுக்கே விநியோகம் செய்திருப்பதாக மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டி மீது பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரே ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தி பொதுமக்களுக்கு விநியோகம் செய்தாரா அல்லது கடத்தல் கும்பலிடம் இருந்து அரிசியை வாங்கி விநியோகம் செய்தாரா என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்தி தொடர்புடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
