×

ஊட்டி பூங்காவில் நாளை முதல் சூட்டிங் நடத்தலாம்

 

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் நலன் கருதி ஆண்டு தோறும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து பூங்காக்களிலும் சூட்டிங் நடத்த இடைக்கால தடை விதிக்கப்படும். அதன்படி ஏப்ரல் 1ம் தேதி முதல் 3 மாதங்களுக்கு ஊட்டி தாவரவியல் பூங்காவில் சூட்டிங் நடத்த தோட்டக்கலைத்துறை விதித்திருந்த தடை இன்றுடன் நிறைவடைகிறது. நாளை முதல் ஊட்டியில் உள்ள பூங்காக்களில் சூட்டிங் நடத்த தடை இல்லை. அடுத்த 9 மாதங்கள் அனைத்து பூங்காக்களிலும் சூட்டிங் நடத்தலாம். எனவே, சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களும் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் நடத்தப்படும் சூட்டிங்குகளை கண்டு ரசிக்கலாம்.

Tags : Ooty Park ,Ooty ,Ooty, Nilgiris district ,Botanical Garden ,Horticulture Department ,
× RELATED பெண்களின் பாதுகாப்பில் NO CHANGE AND NO COMPROMISE:...