பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுமா.!! அமைச்சர் விஜயலட்சுமி சொன்ன முக்கிய தகவல்

விழுப்புரம்: உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான விலையை உயர்த்துவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி தெரிவித்து உள்ளார்.

ஏராளமான விவசாயியால் உபரி வருமானத்திற்காக ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். ஆனால், மாட்டுத் தீவனங்களான 60 கிலோ எடை கொண்ட பருத்தி பிண்ணாக்கு மூட்டை ரூ.2,830, 47.5 கிலோ எடை கொண்ட தவிடு மூட்டை ரூ.880, 50 கிலோ எடை கொண்ட மக்காச்சோள மாவு மூட்டை ரூ.1,440 என தீவனங்களின் விலை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

ஆனால் பால் கொள்முதல் விலை மட்டும் பாப்பா மாதங்களாக உயரவே இல்லை. தற்போதைய நிலையில் ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.32 முதல் ரூ.36 வரை மட்டுமே வழங்குகின்றன. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டமே ஏற்படுகிறது. எனவே, பசும்பால் லிட்டருக்கு ரூ.50, எருமைப் பால் லிட்டருக்கு ரூ.70 -ஆக கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதற்கான மானியத் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அரசு செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் ஆவின் பால் பண்ணையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, ஆவின் பார்லர்களில் அனைத்து வகை தயாரிப்புகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக தெரிவித்தார். பாலின் தரம், பரிசோதனை செய்யப்படும் விதம் குறித்து நேரில் ஆய்வு செய்தார் . அதிநவீன இயந்திரங்கள் மூலம் பால் பாக்கெட்டுகள் தயாரிக்கும் நடைமுறையை பார்வையிட்டார். விநியோக வாகனங்களில் பால் ஏற்றி அனுப்பப்படும் பணிகளை ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழக மக்களுக்குத் தரமான பால் சென்றடைய வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம். உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான விலையை உயர்த்துவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அதுகுறித்த அதிரடி அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும் “தமிழகத்தில் ஆவின் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: