×

வெற்று ஆரவாரங்களால் வேலை கொடுக்க முடியாது, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்: பெ.சண்முகம்

சென்னை: வெற்று ஆரவாரங்களால் வேலை கொடுக்க முடியாது, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் ஒன்றிய அரசை சாட்டியுள்ளார். ஏழைகளை ஏமாற்றுவதும், அவர்களுக்கு எதிராக செயல்படுவதும் தான் பாஜகவின் கொள்கை என சண்முகம் கூறியுள்ளார்.

இது தொடர்பான சமூக வலைதள பதிவில்;
ஜுலை 1 முதல் கிராமப்புற மக்களுக்கு 125 நாட்கள் வேலை வழங்கப்போவதாக ஆரவாரமாக அறிவித்துள்ளது ஒன்றிய அரசு.

வெற்று ஆரவாரங்களால் வேலை கொடுக்க முடியாது. அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால், “வெறும் கையால் முழம் போடுவோம்” என்கிறது ஒன்றிய பாஜக அரசு.

ஏழைகளை ஏமாற்றுவதும், அவர்களுக்கு எதிராகச் செயல்படுவதும்தான் பாஜகவின் கொள்கை. “கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக” என்றார் வள்ளலார். ஒன்றுபடுவோம், போராடுவோம், வெற்றி பெறுவோம்.

Tags : p. ,Sanjmukam ,Chennai ,Marxist Communist Party ,Secretary of State ,B. Sanmugham ,Union Government ,BJP ,
× RELATED கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால்...