×

மேற்கு ஆசியாவில் போர் சூழல்; தங்கம் வாங்குவதை தவிர்த்த மக்களை பாராட்டிய மோடி

புதுடெல்லி: ஒன்றிய பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் தங்கம் வாங்குவதை தவிர்த்து ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் போன்ற பதற்றமான சூழலை கருத்தில் கொண்டு, தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை பிரதமர் மோடி முன்னதாக நாட்டு மக்களுக்கு விடுத்திருந்தார். இந்நிலையில், இன்று தனது 135ம் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர், தனது வேண்டுகோள்களை ஏற்று மக்கள் செயல்பட்டு வருவதற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்.

மேலும், ‘எரிபொருள் சிக்கனம், வீட்டிலிருந்தே பணிபுரிதல், ஒரு ஆண்டுக்கு வெளிநாட்டு பயணங்களை தவிர்த்தல், உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்துதல், சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைத்தல் மற்றும் இயற்கை விவசாயத்திற்கு மாறுதல் போன்ற எனது ஆலோசனைகளை மக்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். ஏராளமான குடும்பங்கள் தங்கம் வாங்குவதை நிறுத்திவிட்டு, வீட்டில் உள்ள பழைய தங்கத்தை உருக்கி புதிய நகைகளாக மாற்றி திருமணங்களை நடத்தி வருகின்றனர்; பலர் தங்களின் வெளிநாட்டு பயணங்களையும் ஒத்திவைத்துள்ளனர்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். சந்தை நிலவரப்படி, உலகளாவிய பொருளாதார காரணிகளால் அடுத்த ஒரு மாதத்திற்கு தங்கம் விலையில் மாற்றம் நிலவ வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் புள்ளி விபரங்களுடன் கணித்துள்ளனர்.

Tags : West Asia ,Modi ,New Delhi ,Union ,
× RELATED தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!