ராமநாதபுரம்: ராமநாதபுரம் பசும்பொன் நகரில் காணாமல் போன 5 வயது சிறுமி பக்கத்து வீட்டின் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி, திடீரென அதிகாலை காணாமல் போனதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
காணாமல் போன சிறுமியை பெற்றோர் தேடி வந்த நிலையில், பக்கத்து வீட்டின் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிணற்றில் இருந்து சிறுமியின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
