×

சென்னையில் பறிமுதலான 2,449 கிலோ கஞ்சா அழிப்பு: காவல்துறை தகவல்

 

சென்னை: சென்னையில் 784 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 2449.37 கிலோ கஞ்சா காவல்துறையால் அழிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; சென்னை காவல் ஆணையாளர் A. அமல்ராஜ், உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்புக் குழு (Drug Disposal Committee -DDC) மூலம் செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கத்தில் உள்ள GJ மல்டிகிளேவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில், அனைத்து சுற்றுச்சூழல் மற்றும் சட்ட வழிமுறைகளுக்கு உட்பட்டு, சென்னை பெருநகர காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் 25.06.2026 அன்று அறிவியல் பூர்வமாக எரித்து அழிக்கப்பட்டது.

சென்னை காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) A.G. பாபு, தலைமையிலான போதைப்பொருள் ஒழிப்புக் குழுவின் மேற்பார்வையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில், துணை ஆணையாளர் (நுண்ணறிவுப் பிரிவு–I) R. சக்திவேல், மற்றும் தடய அறிவியல் துறையின் உதவி இயக்குநர் K. தேவராஜன் ஆகியோர் குழு உறுப்பினர்களாக கலந்து கொண்டனர். இளைஞர்களைப் பாதுகாப்பதற்கும், பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் அவர்களின் வலையமைப்புகளுக்கு எதிராக சென்னை காவல்துறை தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Police Commissioner ,A. Amalraj ,Drug Disposal Committee ,
× RELATED அரசு மற்றும் அரசு உதவி பெறும்...