சென்னை: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். சென்னை, திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பணியாற்றி வந்த எ.வ.வேலுவுக்கு சொந்தமான 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் காலை 7 மணி முதல் சோதனை நடத்திவருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, முன்னாள் பொறியாளர்கள் உள்ளிட்ட 11 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு சாலை விரிவாக்கம் தொடர்பாக சங்கரானந்த் இன்ப்ரா நிறுவனத்திற்கான டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
