×

வெனிசுலா நாட்டில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்

வெனிசுலா நாட்டில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். பயங்கர நிலநடுக்கம் காரணமாக வெனிசுலா தலைநகர் கராகஸில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கம் காரணமாக வெனிசுலாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெனிசுலாவின் மத்திய மற்றும் கடலோரப் பகுதிகளில் வெறும் 39 வினாடிகள் இடைவெளியில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 மற்றும் 7.5 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, பிரதான நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மாலை 6:04 மணிக்கு ஏற்பட்டது. இதன் மையப்புள்ளி, கராகஸ் நகருக்குக் கிழக்கே சுமார் 186 மைல் தொலைவில், நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள மொன்டால்பான் அருகே அமைந்திருந்தது. இந்த வகையான ஆழமற்ற நிலநடுக்கம் பொதுவாக அதிக தீவிரமாக உணரப்படுவதுடன், மேற்பரப்பில் அதிக சேதத்தை ஏற்படுத்த கூடிய அதிக சாத்தியக்கூறுகளையும் கொண்டுள்ளது என கூறியுள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். மேலும் கராகஸில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்து தரமட்டமானது. இந்த இடிபாடுகளில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

Tags : Venezuela ,Caracas ,
× RELATED 500 மின்சார பஸ் கொள்முதல் டெண்டர் ரத்து...