×

ஊட்டி நகராட்சி 17வது வார்டு பகுதியில் பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

 

ஊட்டி, ஜூன் 25: ஊட்டி நகராட்சி 17வது வார்டில் உள்ள சாலை பழுதடைந்து காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இதனிடையே 17வது வார்டிற்குட்பட்ட குன்னூர் சாலை சந்திப்பில் இருந்து ரோஜா பூங்காவிற்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், கனரக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உள்ளது. எனவே, இச்சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Ooty Municipality ,Ooty ,17th ,
× RELATED குன்னூரில் போக்குவரத்து போலீசார்...