தேவையான பொருட்கள்:
*நறுக்கிய முட்டைக்கோஸ் 1 கப்
*பச்சை பட்டாணி – அரை கப்
*பாஸ்மதி அரிசி – 1 கப்
*தண்ணீர் – 2 கப்
*பெரிய வெங்காயம் – 1 (மெல்லியதாக நறுக்கியது)
*பச்சை மிளகாய் – 2
*இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
*புதினா – ஒரு கைப்பிடி அளவு
*கொத்தமல்லி இலைகள் – ஒரு கைப்பிடி அளவு
*மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
*மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
*கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்
*உப்பு -தேவையான அளவு
*தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
*எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
தாளிக்க:
*எண்ணெய் – 2 ஸ்பூன்
*நெய் -1 ஸ்பூன்
*பட்டை -1 இன்ச்
*கிராம்பு – 2
*ஏலக்காய் -1
*அன்னாசிப் பூ – 1
*பிரிஞ்சி இலை -1
*கல்பாசி – சிறிதளவு
செய்முறை:
*முதலில் பாஸ்மதி அரிசியைக் கழுவி ஊறவைக்கவும். முட்டைக்கோஸ் மற்றும் வெங்காயத்தைக் கழுவி நறுக்கித் தனியாக எடுத்து வைக்கவும்.
*ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரியாணி இலை மற்றும் கல்பாசியை சேர்த்து வதக்கவும்.
*மசாலா பொருட்கள் வாசனை வந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
*வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
*பின்னர் நறுக்கிய முட்டைக்கோஸ் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து, அவை சுருங்கும் வரை வதக்கவும்.
*பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலாவை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
*தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
*பின்னர் புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
*அதன்பின் தேவையான அளவு தண்ணீர், அரிசி, எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்க்கவும்.
*நன்றாகக் கலந்து, குறைந்த தீயில் ஒரு விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேகவைக்கவும்.
*பிரஷர் தானாக வெளியேறியதும் அரிசி உடையாமல், முள்கரண்டியால் மெதுவாகக் கிளறிவிடவும்.
*அவ்வளவுதான் சூப்பரான ஆந்திரா ஸ்டைல் முட்டைக்கோஸ் பிரியாணி ரெடி. இதை தயிர் வெங்காயத்துடன் சூடாக பரிமாறவும்.
