திருச்சி, ஜூன் 23: பொறியியல் பணி காரணமாக திருச்சி கோட்ட ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு: வண்டி எண் 76820 திருச்சி – காரைக்கால் டெமு ரயில் ஜூன் 24, 25, 26, 27, 29, 30 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து காலை 8 40 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் வரை மட்டும் செல்லும். வண்டி எண் 76819 காரைக்கால் திருச்சி டெமு ரயில் ஜூன் 24,25, 26, 27, 29, 30 ஆகிய தேதிகளில் திருவாரூரில் இருந்து மாலை 4:15 மணிக்கு புறப்படும்.
மதுரை கோட்டத்தில் பொறியியல் பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம்: வண்டி எண் 16848 செங்கோட்டை மயிலாடுதுறை விரைவு ரயில் ஜூன் 25, 26, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் செங்கோட்டையில் இருந்து காலை 7:00 மணிக்கு புறப்பட்டு மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, வழியாக செல்லும். கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை வழியாக செல்லாது. கூடுதல் நிறுத்தங்கள் மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை சாலை, காரைக்குடி, புதுக்கோட்டை, மற்றும் கீரனூரில் வழங்கப்படும்.
வண்டி எண் 16352 நாகர்கோவில் மும்பை எல்டிடி விரிவுரையில் ஜூன் 25 மற்றும் 28 தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து காலை 6:15 மணிக்கு புறப்பட்டு மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும். திண்டுக்கல் வழியாக செல்லாது. கூடுதல் நிறுத்தங்கள்: மானாமதுரை சிவகங்கை காரைக்குடி மற்றும் புதுக்கோட்டையில் வழங்கப்படும். வண்டி எண் 12666 கன்னியாகுமரி ஹவுரா அதிவிரைவு ரயில் ஜூன் 27ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காலை 5:50 மணிக்கு புறப்பட்டு மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும். கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் வழியாக செல்லாது. கூடுதல் நிறுத்தங்கள்: மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டையில் வழங்கப்படும்.
வண்டி எண் 16128 குருவாயூர்- சென்னை எழும்பூர் விரைவு ரயில் ஜூன் 24, 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் குருவாயூரில் இருந்து இரவு 11:15 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும். மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை வழியாக செல்லாது. கூடுதல் நிறுத்தங்கள் அருப்புக்கோட்டை, மானாமதுரை சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டையில் வழங்கப்படும்.
வண்டி எண் 17070 கன்னியாகுமரி ஹைதராபாத் விரைவு ரயில் ஜூன் 26ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காலை 5:15 மணிக்கு புறப்பட்டு மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் வழியாக செல்லாது கூடுதல் நிறுத்தங்கள் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டையில் வழங்கப்படும். சேலம் கோட்டத்தில் தொடங்க உள்ள பொறியியல் பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம்: வண்டி எண் 56809 திருச்சி ஈரோடு பயணிகள் ரயில் ஜூன் 27ம் தேதி 29ம் தேதி மற்றும் ஜூலை 2ம் தேதி திருச்சியில் இருந்து காலை 7:25 மணிக்கு புறப்பட்டு கரூர் வரை மட்டும் செல்லும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
