ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

ஆண்டிபட்டி, ஜூன் 22: ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் பெய்த பரவலான மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பிச்சம்பட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி, மாயாண்டிபட்டி, கோத்தலூத்து, டி.புதூர், அணைக்கரைப்பட்டி, க.விலக்கு, முத்தணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

Related Stories: