கணாதிபதி துளசி ஜெயின் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

 

வேலூர், ஜூன் 16: வேலூர் அடுத்த கணியம்பாடியில் உள்ள கணாதிபதி துளசி ஜெயின் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. வேலூர் மாவட்டம், கணியம்பாடியில் உள்ள கணாதிபதி துளசி ஜெயின் பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறை, ஐ.இ.டீ.இ மற்றும் ஐ.கியு.ஏ.சி ‘‘எம்பவரிங் எஜிகேட்டர்ஸ் திரோ மல்டிபிள் இன்டிலிஜென்ஸ் அண்ட் அவுட்கம் பேஸ்டு டிச்சிங்’’ என்ற தலைப்பில் ஒரு நாள் ஆசிரியர் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நேற்று காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எம்.பாரதி தலைமை தாங்கினார். துணை முதல்வர் பேராசிரியர் டி.துரை குமார் முன்னிலை வகித்தார். இதில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறைத் தலைவர் ஏ.மணிமேகலை வரவேற்றார். உதவி பேராசிரியர் கே.எஸ்.சாந்தமதி தலைமை விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் பேராசிரியர் பென்னட் ஜே ராக்லேண்ட், (நிர்வாக இயக்குனர் பி.ஜே.ஆர். அகடாமி) ‘‘மல்டிபில் இன்டிலிஜென்ஸ் அண்ட் அவுட்கம் பேஸ்ட்டு’’ என்ற தலைப்பில், கற்பித்தல் முறைகளில் பல்வகை நுண்ணறிவுகளின் பங்கு மற்றும் விளைவு அடிப்படையிலான கற்பித்தலின் முக்கியத்துவம் குறித்து விரிவாக விளக்கினார். நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயனடைந்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பேராசியரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முடிவில் உதவி பேராசிரியர் பி.தென்றல் நன்றி கூறினார்.

 

Related Stories:

தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்: ஆர்டிஓ பங்கேற்பு வேலூர், ஜூன் 22: வேலூர் கோட்டை பூங்காவில் தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் ஆர்டிஓ பங்கேற்றார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் நேற்று யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் ஆர்டிஓ செந்தில் குமார் தலைமை தாங்கினார். சென்னை தொல்லியல் துறை துணை பொறியாளர் பரணிதரன், 10வது என்சிசி பட்டாலியன் சுபேதார் பிரசாத், பாரத் கல்வி குழும இயக்குநர் இந்திரநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.