சென்னை: பெண் கல்வி ஊக்குவிப்பதாக கூறும் பிரதமர் மோடியின் ஒன்றிய அரசு கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். குடும்பத்தில் ஒற்றை பெண் பிள்ளையாக இருப்பவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் சாவித்ரிபாய் ஜோதிராவ் புலே பெயரில் ஆராய்ச்சி குறிப்புக்கான கல்வி உதவித்தொகை திட்டம் ஒன்றிய அரசால் தொடங்கப்பட்டது. முதல் 2 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் ரூ.37 ஆயிரம், அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.42 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் இத்திட்டத்தில் யூஜிசி ஆல் பல மாதங்களாக கல்வி உதவித்தொகை வழங்கப்படாமல் இருப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளார். இதனால் அன்றாட தேவைகளை சமாளிக்க முடியாத நிலையில் ஆராய்ச்சி படிப்பு மாணவிகள் உள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். 2022 ஆம் ஆண்டு இத்திட்டத்தின் பயனாளிகளாக இணைக்கப்பட்ட 1029 மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறாமல் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிச்சயமற்ற தன்மை கல்வி முன்னேற்றத்தை பாதித்து உயர்கல்வியில் பெண்களை மேம்படுத்துவதற்கான ஆதரவையும் குறைப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். பெண் பிள்ளைகளை பாதுகாத்து, கல்வி வழங்குவோம் என்பது வெறும் தேர்தல் முழக்கமாக மட்டும் இருக்க கூடாது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார். நிலுவையில் உள்ள கல்வி உதவித்தொகையை விடுவிப்பதோடு புதிய விண்ணப்பங்களை பெற யு.ஜி.சிக்கு உத்தரவிடுமாறு ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு வலியுறுத்தியுள்ளார்.
ஐஐடியில் இடஒதுக்கீடு விதிகள் மீறல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: எம்பி வில்சன் கோரிக்கை
ஆண்டிமடம் ஒன்றியத்தில் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு
தென்காசியில் பள்ளி கல்வித்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அழகப்பா பல்கலை பட்டமளிப்பு விழா உயர்கல்வித் துறை அமைச்சர் புறக்கணிப்பு
ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கடினமாக உழைக்கும் தலைவர்: பிறந்த நாளில் பிரதமர் மோடி புகழாரம்
மாணவர் மோதல்களை தடுக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!
தமிழக பள்ளிகளில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு முதல்கட்ட நிதி ரூ573 கோடி ஒதுக்கவில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
பாடத்திட்டத்தில் ஆரியன், திராவிடன் கோட்பாடு குறித்து ஆய்வு செய்ய நீதிமன்றம் நிபுணர் அல்ல: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து
550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைத்து இன்றைய இந்தியாவை உருவாக்க சர்தார் படேல்தான் காரணம் : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா உரை
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை(15.10.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சென்னை மெட்ரோ; ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி..!!
உயர்கல்வித் துறை சார்பில் ரூ.156.05 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்கள் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!!
பள்ளிகளில் பழைய, பழுதடைந்த கட்டடங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்
ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதிக்கு ரயில் இணைப்பு அளிக்க ரூ.2,245 கோடி ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்!
கனவு விருது பெற்ற ஆசிரியர்கள் பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா: பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு
ஒன்றிய அமைச்சர் மனோகர் லால், அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தமிழ்நாட்டின் மின்திட்டங்களின் மேம்பாடுகள் குறித்து கலந்தாய்வு
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் NO-Fly லிஸ்ட்டில் சேர்க்க திட்டம்: ஒன்றிய அமைச்சர் தகவல்
பிரான்சுக்கு சுற்றுலா சென்ற பள்ளி ஆசிரியர்கள் சென்னை திரும்பினர்