டெல்லியில் வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம்
நாடாளுமன்ற குழு நடவடிக்கைகளை வெளியிடவில்லை: ஜேபிசி தலைவர் விளக்கம்
சாவித்ரிபாய் ஜோதிராவ் புலே கல்வி உதவித் தொகை நிறுத்திவைப்பு: திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கடும் கண்டனம்
காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்க சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஆஸ்திரேலியா பயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
2026 காமன்வெல்த் விளையாட்டுகளில் இருந்து ஹாக்கி, துப்பாக்கிசுடுதல், மல்யுத்தம் உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நீக்கம்
மக்களவை தேர்தலில் சூதாட்டம் ஆன்லைன் நிறுவனத்தின் 4 கோடி சொத்து பறிமுதல்
டெல்லியில் வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம்..!!
லண்டனில் 3 பேரை கொல்ல முயன்ற இந்திய வம்சாவளி கைது
2026 தேர்தலில் எனக்கு கூட சீட் கிடைக்காமல் போகலாம்: அமைச்சர் பொன்முடி பேச்சு
வக்பு மசோதா ஆய்வு கூட்டத்தில் பாஜ, எதிர்க்கட்சி எம்பிக்கள் மீண்டும் மோதல்
இந்தியாவுக்கு எதிராக சீக்கியர்களை தூண்டிவிடும் கனடா: ஒத்து ஊதும் இங்கிலாந்து
2026 காமன்வெல்த் போட்டியில் ஹாக்கி, மல்யுத்தம், துப்பாக்கிச்சுடுதல் உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நீக்கம்
30 நிமிடத்திற்குள் சீக்கிய யாத்ரீகர்களுக்கு இலவச ஆன்லைன் விசா: பாகிஸ்தான் அறிவிப்பு
மகாராஷ்டிரா பேரவை தேர்தல்: பாஜ முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சிட்டிங் எம்எல்ஏக்கள் 71 பேருக்கு மீண்டும் வாய்ப்பு
செபி தலைவர் வராததால் பிஏசி கூட்டம் ஒத்திவைப்பு..!!
வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது; சூடு பிடிக்கும் மகாராஷ்டிரா தேர்தல் களம்.! வாரிசு வேட்பாளர்களுக்கு கடும் நெருக்கடி
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் பாராமதியில் இந்தமுறை சித்தப்பா, மகன் மோதல்: சரத்பவார் குடும்பத்தில் அடுத்த சண்டை
சென்னை: பெண் கல்வி ஊக்குவிப்பதாக கூறும் பிரதமர் மோடியின் ஒன்றிய அரசு கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். குடும்பத்தில் ஒற்றை பெண் பிள்ளையாக இருப்பவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் சாவித்ரிபாய் ஜோதிராவ் புலே பெயரில் ஆராய்ச்சி குறிப்புக்கான கல்வி உதவித்தொகை திட்டம் ஒன்றிய அரசால் தொடங்கப்பட்டது. முதல் 2 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் ரூ.37 ஆயிரம், அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.42 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் இத்திட்டத்தில் யூஜிசி ஆல் பல மாதங்களாக கல்வி உதவித்தொகை வழங்கப்படாமல் இருப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளார். இதனால் அன்றாட தேவைகளை சமாளிக்க முடியாத நிலையில் ஆராய்ச்சி படிப்பு மாணவிகள் உள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். 2022 ஆம் ஆண்டு இத்திட்டத்தின் பயனாளிகளாக இணைக்கப்பட்ட 1029 மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறாமல் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிச்சயமற்ற தன்மை கல்வி முன்னேற்றத்தை பாதித்து உயர்கல்வியில் பெண்களை மேம்படுத்துவதற்கான ஆதரவையும் குறைப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். பெண் பிள்ளைகளை பாதுகாத்து, கல்வி வழங்குவோம் என்பது வெறும் தேர்தல் முழக்கமாக மட்டும் இருக்க கூடாது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார். நிலுவையில் உள்ள கல்வி உதவித்தொகையை விடுவிப்பதோடு புதிய விண்ணப்பங்களை பெற யு.ஜி.சிக்கு உத்தரவிடுமாறு ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு வலியுறுத்தியுள்ளார்.
சொல்லிட்டாங்க…
வயநாடு தொகுதி இடைத்தேர்தல் ராகுல், பிரியங்கா காந்தி நாளை மீண்டும் பிரசாரம்