ஏழாயிரம்பண்ணை அருகே மரத்தடியில் பட்டாசு தயாரித்தவர் கைது
விதிமீறி பட்டாசு தயாரித்தவர் கைது
வெம்பக்கோட்டையில் 3 ஏக்கர் இடத்தில் 18 குழிகள் இரண்டாம் கட்ட அகழாய்வு பணி நாளை ஆரம்பம்
பராசக்தி மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் ஏழாயிரம்பண்ணை, மே 4: ஏழாயிரம்பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். ஏழாயிரம்பண்ணை நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பராசக்தி மாரியம்மன் கோவில் சித்திரைத்திருவிழா கடந்த ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள் தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், பூஜைகள் நடந்தது. மேலும் நாள் தோறும் கமாதேனு, சிம்மன், சப்பரம் வாகனங்களில் அம்மன் வீதியுலா நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை 5 மணிக்கு துவங்கியது. பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதி வழியாக வலம் வந்த தேர், மாலை 6 மணிக்கு நிலையை வந்தடைந்தது. திருவிழாவில் ஏழாயிரம்பண்ணை, பழைய ஏழாயிரம்பண்ணை மற்றும் சுற்றுக்கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது. நாடார் உறவின் முறை சங்கம் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.