தரகம்பட்டி அருகே கூடுதல் விலைக்கு மது விற்றவர் கைது
செந்துறை பகுதியில் இன்று மின்தடை ரத்து
வாகனத்தில் இருந்து பறந்து வந்து சாலை முழுவதும் சிதறிய 500 ரூபாய் நோட்டுகள்: போட்டி போட்டு அள்ளிய பொதுமக்கள்
நத்தம் பகுதியில் சீனி முருங்கை விளைச்சல் அமோகம்: உரிய விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
வேடசந்தூர் மாமரத்துபட்டியில் கால்நடைகளை கடித்து குதறும் வெறிநாய்கள் நடவடிக்கை எடுக்கப்படுமா?
வேடசந்தூர் மாமரத்துபட்டியில் கால்நடைகளை கடித்து குதறும் வெறிநாய்கள்
வடமதுரை அருகே பணியில் இருந்த அரசு பஸ் டிரைவர் திடீர் மரணம் வடமதுரை, ஜூன் 14: வடமதுரை அருகேயுள்ள பாடியூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (41). திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். திண்டுக்கல் பஸ் நிலையத்திலிருந்து வடமதுரை வழியாக மாமரத்துப்பட்டிக்கு ஒரு அரசு பஸ் தினமும் சென்று வருகிறது. இந்த பஸ் இரவு கடைசி நேர ட்ரிப்பாக திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு மாமரத்துப்பட்டிக்கு சென்று பயணிகளை இறக்கிவிட்டு இரவு முழுவதும் அங்கேயே ஹால்ட் இருந்து விட்டு அதிகாலையில் கிளம்பி திண்டுக்கல் வருவது வழக்கம். அதன்படி கடந்த ஜூன் 10ம் தேதி இரவு டிரைவர் கார்த்திகேயன், பஸ்சை மாமரத்துப்பட்டிக்கு பயணிகளுடன் ஓட்டி வந்துள்ளார். நடத்துனராக ம.முகோவிலூர் பிரிவு ஆரோக்கியசாமி நகரை சேர்ந்த சரவணன் இருந்துள்ளார். மாமரத்துப்பட்டிக்கு வந்து பயணிகளை இறக்கி விட்டதும் பஸ்சை நிறுத்தி விட்டு அருகிலிருந்த நாடக மேடையில் கார்த்திகேயன், சரவணன் தூங்க சென்று விட்டார். நேற்று முன்தினம் அதிகாலை கார்த்திகேயனை எழுப்பிய போது அவர் மயங்கி கிடந்துள்ளார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கார்த்திகேயன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி அருகே விவசாய தோட்டத்தில் பதுக்கிய 24 கிலோ கஞ்சா பறிமுதல் 4 பேர் கைது