×

‘அதிருது’, ‘ஆபத்து’ வைரலாக பரவும் வீடியோ: மார்த்தாண்டம் மேம்பாலம் உறுதியானது

மார்த்தாண்டம்: மார்த்தாண்டத்தில் தென்னிந்தியாவிலேயே மிகவும் நீளமான, தமிழகத்திலேயே மிகவும் பெரிய இரும்பு ேமம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. குழித்துறை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து மார்த்தாண்டம் பம்மம் வரை சுமார் 2.5 கி.மீ தூரத்திற்கு இது அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை பொது மக்கள் பார்வையிடுவதற்காக  இந்த பாலம் திறந்துவிடப்பட்டது. அப்போது மக்கள் சாரைசாரையாக சென்று பாலத்தை பார்வையிட்டனர். அங்கு நின்றபடி சுற்றுப்புற இயற்கை அழகையும் ரசித்தனர். மேம்பாலத்தின் உயரமான பகுதிகளில் ஓரத்தில்  நடந்து செல்லும் போது பாலம் ஆடுவதை உணர்ந்து பொது மக்கள் அச்சம் அடைந்தனர். பாலம் அதிரும் காட்சியை பலரும் வீடியோக்களாக பதிவு செய்து பேஸ்புக், வாட்ஸ்  அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பாலத்தில்  அதிர்வுகள் இருந்தால்தான் விரிசல் விழாது என்று நெடுஞ்சாலைத்துறை  அதிகாரிகள் பதிலளித்துள்ளனர். ஆனால் சாதாரண ெபாது மக்கள்  நடந்து செல்லும்போதே பாலம் ஆடுகிறது. வாகனங்கள்  செல்லும் போது பாலத்தின் நிலை என்னவாகும்? மக்களின் நிலைதான் என்ன? என்று அதிகாரிகள் உரிய விளக்க அளிக்க வேண்டும்  என்ற கோரிக்ைக எழுந்து வருகிறது. இதுகுறித்து மேம்பால வடிவமைப்பு  ஒருங்கிணைப்பாளர் இன்ஜினியர் ஷிபா கூறும்போது: இந்த மேம்பாலம் நவீன தொழில்நுட்பத்தில் மேலைநாட்டு உயர் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தூண்களை தாங்கும் அடிப்பகுதியில் உள்ள பியரிங் எனும் அமைப்பு, பாலத்தின் உயரம், எடைக்கு ஏற்றவாறு தன்னைத்தானே அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும்.  இவை வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டவை. சர்வதேச தரம் வாய்ந்தவை.

மார்த்தாண்டம் மேம்பாலத்தின் அதிகபட்ச உயரம் 9.5 மீட்டர். குறைந்தபட்ச உயரம் 2.5 மீட்டர். பாலத்தில் உயரம் குறைந்த பகுதிகளில் அதிர்வு குறைவாக இருக்கும். ஆனால் உயரம் அதிகமான பகுதியில் அதிர்வை சற்று அதிகமாக உணர முடியும். இதுபோன்ற அதிர்வு  எல்லா பாலங்களிலும் இருக்கும். கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லையேல் பாலம் விரிசல்  கண்டுவிடும்.  இது இயற்கையாகவே அமைக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டம் மேம்பாலம் மிகவும்  உறுதியானதுதான்.  பொது மக்கள் வதந்திகளை நம்ப வேண்டும். ஐதராபாத், சென்னை, புனே ஐஐடி நிபுணர்கள் சோதனை செய்து மேம்பாலத்தின் உறுதித்தன்மையை உறுதி செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேம்பாலத்தில் மயங்கி  விழுந்த பெண்  நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர். உயரமான பகுதியில்  சென்றபோது அவருக்கு  படபடப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Marthandam , Risk, Video, Marthandam uplift
× RELATED மார்த்தாண்டத்தில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு