×

சுரைக்காய் பர்ஃபி

தேவையான பொருட்கள்:

தோல், விதை நீக்கி துருவிய சுரைக்காய் – ஒன்றரை கப்,
தேங்காய்த் துருவல் – அரை கப்,
மைதா மாவு,
பொட்டுக்கடலை மாவு – தலா கால் கப்,
நெய் – சிறிதளவு,
பச்சை நிற ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை,
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
சர்க்கரை – ஒரு கப்,
கண்டன்ஸ்டு மில்க் – அரை கப்,
நட்ஸ் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

சுரைக்காய் துருவலில் நீர் இல்லாமல் ஒட்டப்பிழிந்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும். வெறும் வாணலியில் மைதா மாவு சேர்த்துச் சிவக்க வறுத்து எடுக்கவும். அடிகனமான வாணலியில் சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர் விட்டுக் கொதிக்க விட்டு ஒரு கம்பி பதத்துக்குப் பாகு காய்ச்சவும். அதனுடன் மைதா மாவு, பொட்டுக்கடலை மாவு, நெய், சுரைக்காய்த் துருவல், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். பிறகு ஃபுட் கலர், நெய், ஏலக்காய்த்தூள், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துச் சுருள கிளறி இறக்கி நெய் (அ) வெண்ணெய் தடவிய தட்டில் கொட்டவும். மேலே நட்ஸ் தூவி கொஞ்சம் ஆறியதும் துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

The post சுரைக்காய் பர்ஃபி appeared first on Dinakaran.

Tags :
× RELATED இளநீர் நன்னாரி ஜூஸ்