உலகதாய் மொழிநாளை முன்னிட்டு சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்தவுடன் சபாநாயகர் அப்பாவு உலகத் தாய் மொழி நாள் இன்று கொண்டாடப்படுதையொட்டி, செம்மொழியாம் நம் தாய்மொழி தமிழ்மொழியை போற்றி வணங்கும் வகையில் உறுதிமொழி எடுத்துக்கொள்ள அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நிற்குமாறு கூறினார். இதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து உறுப்பினர்கள் எழுந்து நின்றனர். அப்போது சபாநாயகர் அப்பாவு உறுதிமொழி வாசிக்க, உறுப்பினர்கள் அனைவரும் வழிமொழிந்தார்கள். அதாவது, “எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் என்ற நடை முறையை கொண்டு வர பாடுபடுவோம். தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்த நாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம், குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம், இணையற்ற தமிழுடன் இணைய தமிழையும் காத்து வளர்ப்போம்” என உலக தாய்மொழி நாளன்று உறுதியேற்போம்” என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
The post உலக தாய்மொழிநாளை முன்னிட்டு பேரவையில் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.