×

உலகக்கோப்பை 2023: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி..!

டெல்லி: உலகக்கோப்பை 2023: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான உலகக்கோப்பையின் 9-ஆவது லீக் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிடி பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, ஆப்கானிஸ்தான் அணியில் முதலில் ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரஹ்மானுல்லா குர்பாஸ் 21, இப்ராஹிம் சத்ரான் 22 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தனர்.

இதன்பிறகு இறங்கிய ரஹ்மத் ஷா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, அஸ்மத்துல்லா உமர்சாய் சிறப்பாக விளையாடி சரிவில் இருந்த அணியை மீட்டு கொண்டு வந்தனர். ஹஷ்மத்துல்லா 80 ரன்களும் உமர்சாய் 62 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினார். பிறகு இறங்கிய முகமது நபி , நஜிபுல்லா மற்றும் ரஷித் கான் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணியில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 273 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் , இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினர். முந்தைய போட்டியில் ரோஹித் , இஷான் கிஷன் இருவரும் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தனர். இதனால் இன்றைய போட்டியில் இருவரும் சிறப்பாக விளையாடுவார்களா..? என்ற கேள்வி ரசிகர்களுக்கு இருந்தது. அதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக ரோஹித் , இஷான் கிஷன் இருவரும் சிறப்பாக விளையாடினர்.

ஆட்டம் தொடங்கியது ரோஹித் தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கினர். மறுபுறம் நிதானமாக விளையாடிய இஷான் கிஷனும் அதிரடியாக விளையாடினர். முதலில் ரோஹித்அரைசதம் அடித்த நிலையில் இஷான் கிஷனும் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த போது 47 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பிறகு விராட் கோலி களமிறங்க அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் 63 பந்தில் சதம் விளாசி உலககோப்பையில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.

ரோஹித் 150 ரன்கள் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 131 ரன் எடுத்து ரஷித் கான் ஓவரில் போல்ட் ஆனார். அதில் 16 பவுண்டரி , 5 சிக்ஸர் விளாசினார். களத்தில் இருந்த கோலி முந்தைய போட்டியில் பொறுப்புடன் விளையாடியது போல இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினர். இறுதியாக இந்திய அணி 35 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 273 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோலி 55* ரன் எடுத்தும், ஷ்ரேயாஸ் ஐயர் 25* ரன் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தனர்.

ஆப்கானிஸ்தான் அணியில் ஃபசல்ஹக் ஃபாரூக்கி , தலா 1 விக்கெட்டை பறித்தனர். இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவியது பெற்றுள்ளது. புள்ளி பட்டியலில் இந்திய அணி 2-வது இடத்தில் உள்ளது.

The post உலகக்கோப்பை 2023: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி..! appeared first on Dinakaran.

Tags : World Cup 2023 ,Afghanistan ,Delhi ,Indian ,Disrupted ,
× RELATED ஆஸ்திரேலியாவை சுருட்டி ஆப்கானிஸ்தான்...