×

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி எதிரொலி… அகமதாபாத்துக்கான விமான கட்டணம் தற்போது 350% வரை உயர்வு!!

அகமதாபாத் : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய, பாகிஸ்தான் இடையேயான ஆட்டங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், போட்டி நடைபெறும் அகமதாபாத்துக்கான விமான கட்டணம் தற்போது 350% வரை உயர்ந்துள்ளது. ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடக்கப் போட்டி, இறுதிப் போட்டி மற்றும் இந்திய – பாகிஸ்தான் இடையேயான போட்டிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகின்றன. கிரிக்கெட் ரசிகர்கள், விவிஐபிக்கள், ஸ்பான்சர்கள் இப்போட்டிக்கான ஹோட்டல் மற்றும் பயண முன் பதிவுகளை ஏற்கனவே தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில், போட்டி நாட்களில் அதிக தேவை இருக்கும் என்பதால் அக்டோபர் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை முக்கிய நகரங்களில் இருந்து அகமதாபாத் செல்லும் விமான கட்டணங்கள் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து அகமதாபாத் வரையிலான இருவழி பயணத்திற்கு 3 மாதங்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்தாலும் நேரடி விமானங்களில் நபர் ஒருவருக்கு ரூ.45,425 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

சாதாரண சூழ்நிலையில், சென்னை அகமதாபாத் – இடையே இருவழிப் பயணத்திற்கு ரூ.10,000 மட்டுமே செலவாகும். உலக கோப்பை நடக்கும் தேதிகளில் மும்பை, டெல்லியில் இருந்து அகமதாபாத் செல்லும் விமானக் கட்டணங்களும் 200% முதல் 325% அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன. ஐசிசி போட்டிக்கு இன்னும் 3 மாதங்கள் இருப்பதால் மற்ற நகரங்களில் இருந்து அகமதாபாத்துக்கான விமான கட்டணம் மேலும் அதிகரிக்கும் என்று இந்திய பயன முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

The post உலக கோப்பை கிரிக்கெட் போட்டி எதிரொலி… அகமதாபாத்துக்கான விமான கட்டணம் தற்போது 350% வரை உயர்வு!! appeared first on Dinakaran.

Tags : Cricket World Cup ,Ahmedabad ,India ,Pakistan ,World Cup cricket ,World Cup Cricket match ,Dinakaran ,
× RELATED வெளிநாடுகளில் இருந்து குஜராத்துக்கு கடத்திய ரூ.3.50 கோடி கஞ்சா பறிமுதல்