×

24வது உலக பார்வை தினம் பொதுமக்களுக்கு பார்வை இழப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

*திருப்பதி கலெக்டர் பேச்சு

திருப்பதி : பொதுமக்களுக்கு பார்வை இழப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என 24வது உலக பார்வை தினத்தில் மாவட்ட கலெக்டர் கூறினார்.திருப்பதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24வது ‘உலக பார்வை தினத்தை’ முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் வெங்கட் ரமணா கலந்து கொண்டு பேசியதாவது:

பார்வை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வியாழன் அன்று உலக பார்வை தினம் கடைபிடிக்கப்பட்டு படுகிறது.
இந்த ஆண்டுக்கான ‘வேலையில் உங்கள் கண்களை நேசியுங்கள்’ என்ற முழக்கத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

கண்கள் முகத்தின் நகைகள், கண்கள் ஆரோக்கியமாக இருப்பதைப் போல நாமும் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருப்போம். சர்வேந்திரியானாம் நயனம் தான் முக்கியம் என்று தெரிந்தும் பலர் கண்கள் மீது அலட்சியமாக இருக்கின்றனர். கண்களை கவனிக்காவிட்டால் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். மக்களிடம் இருந்து வரும் கண் பிரச்னைகளை நீக்கும் நோக்கில், ‘கண்டிவெளுகு’ என்ற திட்டத்தை அரசு துவக்கி, மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவச கண் பரிசோதனை செய்து, ஏழைகளுக்கு கண் கண்ணாடி, அறுவை சிகிச்சை, மருந்துகளை வழங்கி வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.

இதில், மாவட்ட மருத்துவ சுகாதார அதிகாரி ஹரி கரு, டிபிஎம்ஓ சீனிவாச ராவ், மாவட்ட பார்வையற்றோர் தடுப்பு நிறுவன திட்ட அலுவலர் டாக்டர் மதுபாபு, ஆர்பிஎஸ்கே மருத்துவ அலுவலர் ஹரிநாத், தொற்றுநோய் நிபுணர் கீர்த்தி பிரியா, எம்ஆர். பல்லே யுபிஎச்சி எம்ஓ ஊர்மிளா, கிரண் குமார் டிடிஎம்ஓ, ரவிசங்கர் உள்ளிட்ட ஊழியர்கள் மற்றும் ஆஷா ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

The post 24வது உலக பார்வை தினம் பொதுமக்களுக்கு பார்வை இழப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : 24th World Vision Day ,Tirupati ,24th World ,Dinakaraan ,
× RELATED விண்வெளியில் இந்தியாவின் புதிய பாய்ச்சல்: நாளை விண்ணில் பாய்கிறது PSLV-C62!