×

வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி 27ம்தேதி அறிவிப்பு

மும்பை:இந்திய கிரிக்கெட்அணி அடுத்த மாதம் வெஸ்ட்இண்டீசுக்கு சுற்றுப்பயணம்மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒன்டே மற்றும் 5 டி.20 போட்டிகளில் ஆடி உள்ளது. இதற்காக இந்திய அணி வரும் 27ம்தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ரோகித் சர்மா மற்றும் கோஹ்லி டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ள நிலையில்,ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள்.

பணிச்சுமை காரணமாக சிராஜ் மற்றும் ஷமிக்கும் ஒயிட்பால்(ஒன்டே, டி.20) போட்டிகளில் ஓய்வு அளிக்கப்படலாம். சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட இளம்வீரர்கள் ஒரு நாள் மற்றும் டி.20 போட்டிகளில் இடம்பெறுவார்கள். ஒயிட்பால் கிரிக்கெட்டில் ஹர்திக்பாண்டியா கேப்டனாக செயல்படுவார்.

The post வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி 27ம்தேதி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : F.V. ,Indian ,Indies series ,Mumbai ,West Indies ,Indies Series 27th ,Dinakaran ,
× RELATED பள்ளிக்கூட வாசலில் வாகனத்தை...