×

வெள்ளை மாளிகை இரங்கல்

காசா: காசா மருத்துவமனையில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் பொறுப்பேற்க மறுத்த நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், ‘பாலஸ்தீனியர்களுக்கு எதிரான போர் மற்றும் படுகொலைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். காசா மருத்துவமனை தாக்குதல் சம்பவம் குறித்து அதிபர் பிடனிடம் தேசிய பாதுகாப்புக் குழு விவரித்தது.

மக்களின் பாதுகாப்பினை அமெரிக்கா உறுதி செய்யும். மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலால் பலியான நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் அப்பாவி மக்களுக்கு எங்களது இரங்கல் தெரிவிக்கிறோம்’ என்று ெதரிவித்துள்ளது.

The post வெள்ளை மாளிகை இரங்கல் appeared first on Dinakaran.

Tags : White House ,Gaza ,Israel ,Hamas ,White ,
× RELATED ஏமன் மீதும் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்