×

கோதுமை ரவை காரப் பொங்கல்

தேவையானவை:

கோதுமை – 1 கப்,
வெங்காயம்,
தக்காளி,
பீன்ஸ்,
கேரட்,
குடை மிளகாய்,
பச்சை பட்டாணி (காய்கள் நறுக்கிக்கொள்ளவும்) – தலா ¼ கப்,
பாசிப்பருப்பு – ¼ கப்,
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் – 3,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை,
பட்டை,
கிராம்பு,
ஏலக்காய்,
அன்னாசிப்பூ – தலா 1,
புதினா தழை – சிறிது.

செய்முறை:

பாசிப்பருப்பைக் குழைய வேக வைத்து தனியே வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை தாளித்து நறுக்கிய காய்கறிகள், பட்டாணி சேர்த்து பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் 2 கப் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் சேர்த்து தண்ணீர் கொதி வந்தவுடன் பாசிப்பருப்பை போட்டு கோதுமை ரவை சேர்த்து கிளறவும். நன்றாக கொதித்து ரவை வெந்ததும் அடுப்பை அணைத்து கறிவேப்பிலை கிள்ளிப்போட்டு கிளறி பரிமாறவும். தயிர் வெங்காய பச்சடி, சாஸ் துணையாக சேர்த்து சாப்பிடலாம்.

The post கோதுமை ரவை காரப் பொங்கல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED பீர்க்கங்காய் துவையல்