×

களை கட்டும் கலை நிகழ்ச்சிகள்

 

நடப்பு உலக கோப்பை தொடருக்கு பிரமாண்டமான தொடக்கவிழா நடத்தப்படாத நிலையில், மோடி ஸ்டேடியத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளைடையே இன்று நடக்கும் லீக் ஆட்டத்துக்கு முன்பாக வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. உலக கோப்பைக்கு ‘கோல்டன் டிக்கெட்’ வழங்கப்பட்டுள்ள நட்சத்திரங்கள் சச்சின், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது. பிரபல பாடகர்கள் ஷங்கர் மகாதேவன், அர்ஜித் சிங், சுக்விந்தர் சிங் இசை மழை பொழிய… ரன்வீர் சிங், தமன்னா நடனமாடி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர். போட்டி பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்கும் நிலையில், கலை நிகழ்ச்சிகள் பிற்பகல் 12.30க்கு தொடங்கி நடைபெறும் என பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்தியா: ரோகித் (கேப்டன்), ஹர்திக், அஷ்வின், பும்ரா, இஷான், ஷ்ரேயாஸ், ஜடேஜா, கோஹ்லி, குல்தீப், ஷமி, சிராஜ், கே.எல்.ராகுல், கில், ஷர்துல், சூரியகுமார். பாகிஸ்தான்: பாபர் ஆஸம் (கேப்டன்), அப்துல்லா ஷபிக், ஆஹா சல்மான், பகார் ஸமான், ஹரிஸ் ராவுப், ஹசன் அலி, இப்திகார் அகமது, இமாம் உல் ஹக், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், சவுத் ஷகீல், ஷதாப் கான், ஷாகீன் ஷா அப்ரிடி, உசாமா மிர்.

* இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் இந்தியா 4-0 என முன்னிலையில் உள்ளது (ஆசிய கோப்பையில் இந்த அணிகள் மோத இருந்த ஒரு லீக் ஆட்டம் மழையால் ரத்தானது).

* இந்தியா-பாக். அணிகள் இதுவரை 134 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளதில் பாக். 73-56 என முன்னிலை வகிக்கிறது (5 ஆட்டங்களில் முடிவு இல்லை).

* இந்தியாவில் விளையாடிய 30 ஆட்டங்களில் பாக். 19, இந்தியா 11ல் வென்றுள்ளன.

* அகமதாபாத் மோடி அரங்கில் மட்டுமல்ல, முன்பு படேல் அரங்கமாக இருந்தபோதும் பாக். அங்கு விளையாடியதே இல்லை. இன்று தான் முதல்முறையாக களமிறங்குகிறது.

* இந்தியா இதுவரை 18 முறை அகமதாபாத்தில் விளையாடியுள்ளதில் 10ல் வென்றள்ளது. மோடி அரங்கமாக மாற்றப்பட்ட பிறகு நடந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியாவே வென்றது.

* அகமதாபாத்தில் இதுவரை நடந்த 27 ஒருநாள் போட்டிகளில்… முதலில் பேட் செய்த அணி 14 முறை, சேஸ் செய்த அணி 13 முறை வென்றுள்ளன.

The post களை கட்டும் கலை நிகழ்ச்சிகள் appeared first on Dinakaran.

Tags : World Cup ,India-Pakistan ,Modi Stadium ,Dinakaran ,
× RELATED டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்;...