×

வயநாடு நிலச்சரிவின் பாதிப்பு குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விளக்கம்..!!

வயநாடு: வயநாடு நிலச்சரிவின் பாதிப்பு குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விளக்கம் அளித்து வருகிறார். நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு மீட்புக் குழுவினர் செல்ல தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. அட்டமலை, சூரல்மலையில் உள்ளிட்ட இடங்களில் மீட்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. நிலச்சரிவில் சிக்கிய மக்களுக்கு உணவுப் பொருட்களை கொண்டு செல்ல கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி 191 பேரை காணவில்லை; பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

The post வயநாடு நிலச்சரிவின் பாதிப்பு குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விளக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Chief Minister ,Pinarayi Vijayan ,Wayanadu ,Atamalai ,Suralmala ,landslide ,Dinakaran ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்....