×
Saravana Stores

நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட குப்பையநல்லூர் மேட்டுக்காலனி அருகே சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட செட்டிகுளம் உள்ளது. இந்த குளம் அப்பகுதி மக்களின் மிக முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது. அப்பகுதி மக்கள் கால்நடை மேய்ச்சலுக்காக இந்த குளக்கரையினை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த குளத்தின் அருகே உள்ள நீர்நிலை பகுதியினை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த ஆக்கிரமிப்பினால் குளத்தில் நீர்வரத்து குறைய வாய்ப்புள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது, பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தலையிட்டு நீர்நிலை ஆக்கிரமிப்பினை உடனடியாக அகற்றி, நீர்நிலைகளை பாதுகாத்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Uttara Merur ,Chettikulam ,Mettukalani ,Uthramerur Municipal Corporation ,Dinakaran ,
× RELATED உத்திரமேரூரில் பரபரப்பு: அரசு பள்ளியில் திடீர் தீ; ஆவணங்கள் எரிந்து சேதம்