×

நீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் இன்று காவிரி ஆணையம் அறிக்கை தாக்கல்

புதுடெல்லி: ஒழுங்காற்று குழு மற்றும் ஆணையத்தின் கூட்டம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்த அவசர வழக்கின் மீது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விரிவான அறிக்கை கொண்ட பிரமாணப்பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறது. காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் நடந்த கூட்டத்தின் விவரங்களை எழுத்துப்பூர்வமாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விரிவாக வெளியிட்டுள்ளது. அதில், ’காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், உச்ச நீதிமன்றம் வழங்கிய முந்தைய தீர்ப்பின் படி 29.08.2023 முதல் 12.09.2023 வரையில் கர்நாடகா தண்ணீர் வழங்கியிருந்தால் நாள் ஒன்றுக்கு 7200 கன அடி தண்ணீர் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் கர்நாடகாவில் மழையில்லை என்பதால் தற்போது 5000ஆயிரம் கன அடி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும்

செப்டம்பர் 5 முதல் 10ம் தேதி வரையில் மிதமான மழை இருக்கும் என்பதால் அதன் அடிப்படையில் அப்போது கூடுதலாக தண்ணீர் தர முயற்சிக்கிறோம். மேலும் தற்போது தமிழ்நாட்டிலும் விரைவில் வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளது என கர்நாடகா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்தையும் அடிப்படையாக கொண்டு தான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த விரிவான அறிக்கையை பிரமாணப்பத்திரமாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறது. இதையடுத்து காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் அவசர மனு நாளை மீண்டும் விசாரணைக்கு வரும்போது அனைத்தையும் உச்ச நீதிமன்றம் விரிவாக ஆய்வு செய்யும் என தெரியவருகிறது.

The post நீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் இன்று காவிரி ஆணையம் அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Cauvery Commission ,Supreme Court ,New Delhi ,Tamil Nadu government ,
× RELATED கனிம வளங்கள் தொடர்பான உரிமைகளுக்கு...