×

நடப்பாண்டு குறுவை சாகுபடிக்காக வழக்கம் போல் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்: நீர்வளத்துறை அமைச்சர் பேட்டி

தஞ்சை: நடப்பாண்டு குறுவை சாகுபடிக்காக உரிய காலமான ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். தஞ்சை பூதலூரில் ரூ.90 கோடியில் தூர்வாரும் திட்டத்தை நீர்வளத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:
கடைமடை பகுதி வரை காவிரி நீர் சென்றடையும் வகையில் பாசன ஆறுகள், வாய்க்கால்கள் முழுமையாக தூர்வாரப்படும். நடப்பாண்டு குறுவை சாகுபடிக்காக வழக்கம் போல் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 101.1 அடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 67 டி.எம்.சி.யாக உள்ளதால் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post நடப்பாண்டு குறுவை சாகுபடிக்காக வழக்கம் போல் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்: நீர்வளத்துறை அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Mettur Dam ,Water Resources ,Thanjavur ,Minister ,Dinakaran ,
× RELATED தரிசாக கிடக்கும் ஆற்றுப்பாசன வயல்கள்...