×

வக்பு திருத்த சட்டம் வாபஸ் கோரி திருச்சியில் மே 31ம் தேதி பேரணி: திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறு சீரமைப்பு கலந்தாய்வுக் கூட்டம் சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.  இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர் என்.ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

சாதிய கொடுமைகளை கட்டுப்படுத்த அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வக்பு திருத்த சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். வக்பு திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் மதசார்பின்மையை பாதுகாக்கவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரும் மே 31ம் தேதி திருச்சியில் பேரணி நடைபெறும் ஆகியவை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சில.

The post வக்பு திருத்த சட்டம் வாபஸ் கோரி திருச்சியில் மே 31ம் தேதி பேரணி: திருமாவளவன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Rally ,Trichy ,Thirumavalavan ,Chennai ,Viduthalai Siruthaigal Party ,Ashok Nagar, Chennai ,Supreme Court ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...