×

இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் 1.71 கோடி பேர் வாக்களிக்க 13,421 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் சார்பில் 5,464 வேட்பாளர்கள், சுயேச்சைகள் 3,357 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே, ராஜபக்சே சகோதரர்கள் போட்டியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 225 இடங்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவைப்படுகின்றன. 196 உறுப்பினர்களை தேர்வு செய்ய இலங்கை மக்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குகள் சதவீத அடிப்படையில் 29 பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 

The post இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது! appeared first on Dinakaran.

Tags : SRI LANKA ,PARLIAMENTARY ,SRI LANKA PARLIAMENTARY ,Sri Lanka Parliamentary elections ,Dinakaran ,
× RELATED ரீல்ஸ் எடுக்க முயன்று ரயிலில் இருந்து கீழே விழுந்த இளம்பெண்!