ஆதவ் ஆர்ஜூனா கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரவிக்குமார், ““திமுக – விசிக கூட்டணி எண்ணிக்கை அடிப்படையிலானது அல்ல, அது ஒரு கொள்கைக் கூட்டணி. விசிக இல்லையென்றால்
வடமாவட்டங்களில் திமுகவால் தேர்தலில் வெல்ல முடியாது என்ற ஆதவ் அர்ஜுனாவின் கருத்து உண்மைக்கு மாறானது மட்டுமல்ல, அரசியல் முதிர்ச்சியற்றது. கூட்டல் கழித்தல் கணக்குக்கு மாறாக கொள்கை அடிப்படையிலேயே திமுக கூட்டணி வெற்றி பெற்றிருப்பதை அணுக வேண்டும். தமிழ்நாடு புதுவை உள்ளிட்ட 40 மக்களவை தொகுதிகளில் கூட்டணி வெற்றி பெற திமுகவும் முக்கிய காரணம்.திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெல்ல விசிக உதவியது என்பது உண்மை. அதேபோல, விசிகவுக்கு2 MPக்கள், 4 MLAக்கள் இருப்பது திமுக உடனான கூட்டணியால்தான்”இவ்வாறு தெரிவித்தார்.
The post விசிக 2 எம்பி தொகுதிகளிலும், 4 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற திமுகவே காரணம் : ரவிக்குமார் கருத்து!! appeared first on Dinakaran.