×

எச் 1 பி விசாக்களை புதுப்பிக்க இனி சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டாம்..அமெரிக்க அரசின் புதிய நடைமுறைக்கு வெளிநாட்டினர் வரவேற்பு!!

வாஷிங்டன்: அமெரிக்காவிலேயே புதுப்பிக்கத் தக்க எச் 1 பி விசாக்களை அறிமுகப்படுத்த ஜோபிடன் அரசு முடிவு எடுத்துள்ளது. இதனால் இந்திய தொழில் வல்லுநர்கள் இனி வெளிநாடுகளுக்கு செல்லாமல் தங்கள் பணி விசாக்களை புதுப்பித்துக் கொள்ள முடியும். அமெரிக்காவில் ஹெச்-1பி (H1B) எனப்படும் விசாவை புதுப்பிக்க வெளிநாட்டு தொழில்நுட்ப பணியாளர்கள், அந்நாட்டை விட்டு வெளியே சென்றுதான் புதுப்பிக்க வேண்டியுள்ளது. 2004ல் இருந்து இது நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு 3 ஆண்டு கால முடிவிலும் இந்த விசாவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்காக பாஸ்போர்ட்டில் புதுப்பிக்கப்பட்ட தேதியை ‘ஸ்டாம்பிங்’ (stamping) செய்து கொள்ள வேண்டும். தற்போதுள்ள நடைமுறையில் இந்த ‘ஸ்டாம்பிங்’ பதிவை அமெரிக்காவிற்குள்ளேயே செய்து கொள்ள அந்நாடு அனுமதிப்பதில்லை.

இதனால் பயனாளர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு சென்று அங்குள்ள அமெரிக்க தூதரகத்தில் மீண்டும் வேலை நீடிப்பு உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து விசாவை புதுப்பித்து அதன் பிறகே மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைய முடிந்தது. இதுகுறித்து அமெரிக்காவிலுள்ள பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் முறையிட்டு வந்தனர். அமெரிக்காவில் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், விசா புதுப்பிக்கும் முறை மாற்றப்படும் என்று அறிவிக்ப்பட்டுள்ளது. இதன்படி, இனி இந்தியர்களும், மற்ற வெளிநாட்டவர்களும் அமெரிக்காவிற்குள்ளேயே தங்கள் விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம். எச்1 பி விசாவுடன் 6 ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்காவில் பணியாற்றினால் அவர்களால் நிரந்தர அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான கிரீன் கார்டு பெற விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post எச் 1 பி விசாக்களை புதுப்பிக்க இனி சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டாம்..அமெரிக்க அரசின் புதிய நடைமுறைக்கு வெளிநாட்டினர் வரவேற்பு!! appeared first on Dinakaran.

Tags : US government ,Washington ,US ,Dinakaran ,
× RELATED வாஷிங்டனில் சுட்டெரித்த வெயிலால் உருகிய ஆபிரகாம் லிங்கன் மெழுகு சிலை