×

பயிற்சியின்போது நாய்க்குட்டியை குழந்தைபோல் கொஞ்சிய கோலி: வீடியோ வைரல்


மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் சுற்றில் மிக முக்கியமான ஆட்டமாக நாளை (ஞாயிறு) இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரிட்சை நடத்துகிறது. இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இந்த ஆட்டத்திற்கு மட்டும் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் எடுத்த இந்த முடிவுக்கு வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தான் போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கொழும்புவில் நேற்று மாலை இந்திய அணி வீரர்கள் பீல்டிங் மற்றும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்கள். இந்த பயிற்சிக்கு முன்பு வார்ம் அப் செய்வதற்காக வீரர்கள் கால்பந்து ஆட்டத்தில் விளையாடுவது வழக்கம். அப்போது மைதானத்தில் ஒரு நாய்க்குட்டி இந்திய வீரர்களை சுற்றிக் கொண்டு நின்றது. அந்த நாய்க்குட்டியை பார்த்த விராட் கோலி அதனை செல்லமாக அழைக்க அது அழகாக வாலை ஆட்டிக்கொண்டு விராட் கோலியிடம் சென்றது. இதை அடுத்து அந்த நாய்க்குட்டியை விராட் கோலி பாசமாக கொஞ்சினார். இதனையடுத்து வீரர்கள் நாய்க்குட்டியுடன் கால்பந்து விளையாட தொடங்கினர்.

விராட் கோலி அடித்த பந்தை அந்த நாய்க்குட்டி பிடிப்பதற்காக ஓடி சென்றது. பின்னர் வீரர்களின் பயிற்சியை நாம் தடை செய்கிறோம் என்பதை புரிந்து கொண்டது போல் அந்த நாய்க்குட்டி அங்கிருந்து சென்று விட்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. விராட் கோலி நாய் போன்ற விலங்குகள் மீது பிரியம் கொண்டவர். தெருவில் இருக்கும் நாய்களை பார்த்துக் கொள்வதற்காகவே விராட் கோலி ஒரு அமைப்பை தொடங்கி பல நாய்களை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பயிற்சியின்போது நாய்க்குட்டியை குழந்தைபோல் கொஞ்சிய கோலி: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Kohli ,Mumbai ,India ,Pakistan ,Asian Cup Cricket Series Super Round ,Dinakaran ,
× RELATED நினைவில் கொள்ளக்கூடிய இந்த...