×

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சேர 46,720 பேர் விண்ணப்பம்

*வீடு, வீடாக சென்று ஆட்சியர் ஆய்வு

*ஜன.5ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேருவதற்கு 46,720 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் வீடு, வீடாக சென்று ஆட்சியர் பழனி ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் 2024 வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணியின் கீழ் 7 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வரைவுவாக்காளர் பட்டியலை கடந்த அக்டோபர் 27ம் தேதி ஆட்சியர் பழனி வெளியிட்டார்.

அதன்படி செஞ்சி தொகுதியில் 2,51,580 வாக்காளர்களும், மயிலம் தொகுதியில் 2,09,849 வாக்காளர்களும், திண்டிவனம் தொகுதியில் 2,25,075 வாக்காளர்கள், வானூர் 2,24,302 வாக்காளர்கள், விழுப்புரம் 2,54,612 வாக்காளர்கள், விக்கிரவாண்டி 2,30,564 வாக்காளர்கள், திருக்கோவிலூர் 2,53,850 வாக்காளர்கள் என மொத்தம் 7 சட்டமன்றதொகுதிகளிலும் 8,15,967 ஆண் வாக்காளர்களும், 8,33,657 பெண் வாக்காளர்கள், 208 திருநங்கைகள் என மொத்தம் 16,49,832 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர்.

தொடர்ந்து கடந்த 9ம் தேதி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், இணையதளத்தில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக நவம்பர் மாதம் 4,5,18,19 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிற்றுக்கிழமை) சிறப்புமுகாம் நடைபெற்றது. கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனை மனுக்கள் மீது வரும் 26ம் தேதி முடிவு செய்யப்படும்.

ஜனவரி 5ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து தொகுதியிலிருந்தும் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக 46,720 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி தகுதியான மனுக்கள் விடுபடக்கூடாது என்றும், கல்லூரிகளில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும். 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். புதிதாக விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் விவங்களை வீடுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி வாக்காளர் அலுவலர்கள் இந்த விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மாவட்ட ஆட்சியர் பழனி திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூர், வானூர், செஞ்சி உள்ளிட்ட தொகுதிகளில் புதிதாக வாக்காளர்பட்டியலில் சேருவதற்காக அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து வீடு, வீடாக சென்று ஆய்வுமேற்கொண்டார். வாக்காளர் விண்ணப்பத்தில் தெரிவித்த தகவல்கள் உண்மையா என்றும், 18 வயது பூர்த்தியடைந்ததற்கான ஆவணங்கள் குறித்து சரிபார்த்து ஆய்வு செய்தார்.

இதேபோல் தமிழகம், புதுச்சேரி எல்லைகளில், இரட்டை வாக்குரிமை குறித்து புகார் வந்த கிராமங்களிலும் வாக்காளர்பட்டியல் உண்மைதன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்குப்பிறகு ஆட்சியர் பழனி கூறுகையில், இந்தியதேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டத்தில் 18வயது நிரம்பியவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தங்கள்பெயர்களை வாக்காளர்பட்டியலில் சேர்த்திட விண்ணப்பித்தனர்.

அதனைதொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பத்தின் உண்மைநிலை குறித்து அறிந்திடும்வகையில் விண்ணப்பித்தவர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பங்கள் வாக்காளர்பட்டியலில் சேர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சேர 46,720 பேர் விண்ணப்பம் appeared first on Dinakaran.

Tags : Villupuram district ,Villupuram ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தல் கணினி...