×

விழுப்புரம் அருகே 500 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

*கடைகளுக்கு அபராதம் விதிப்பு

விழுப்புரம் : விழுப்புரம் ஆட்சியர் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்தறை மாவட்ட நியமன அலுவலர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பிரசாத், பத்மநாபன் மற்றும் அன்பு பழனி ஆகியோர் கொண்ட குழுவினர் காணை ஒன்றியம் பகுதியில் உள்ள மளிகை கடைகள், டீக்கடைகள், சிற்றுண்டி கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் கப், தெர்மாகோல் கப், மற்றும் கேரி பேக் 450 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. ஆய்வில் முறையான லேபிள் இல்லாத உணவு பாக்கெட்டுகள் 10 கிேலா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அதிக செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட பழச்சாறுகள் 9 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டு கொட்டி அழிக்கப்பட்டது. 18 கடைகள் ஆய்வு செய்யப்பட்டதில் 5 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி அபராதமாக 5 கடைகளுக்கு தலா ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஆய்வின்போது உணவு வணிகர்களுக்கு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், லேபிள் இல்லாத உணவுப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களில் செயற்கை நிறங்களை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் விழுப்புரம் நகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

The post விழுப்புரம் அருகே 500 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Vilappuram ,Viluppuram ,Ruler ,Food ,Security ,District ,Nomission Officer ,Sugandan ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு