×

துணைவேந்தர் இல்லாமல் இயங்கும் சென்னை பல்கலைக்கழகம்; தமிழகத்தில் பல சர்ச்சைகளுக்கு மையமாக தமிழக கவர்னர் இருப்பது ஏன்? ப.சிதம்பரம் கேள்வி

சென்னை: துணைவேந்தர் இல்லாமல் சென்னை பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது என்றும், தமிழகத்தில் பல சர்ச்சைகளுக்கு மையமாக தமிழக கவர்னர் இருப்பது ஏன்? என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ப.சிதம்பரம் இன்று தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: 1857ல் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் மூன்று பல்கலைக்கழகங்களில் ஒன்று சென்னை பல்கலைக்கழகம்.

இந்த பல்கலைக்கழகம் கடந்த 5 மாதங்களாக துணை வேந்தர் இல்லாமல் உள்ளது. கவர்னர்-அரசு இடையே ஏற்பட்டுள்ள நிலைப்பாடு தான் காரணம். தமிழகத்தில் பல சர்ச்சைகளுக்கு மையமாக தமிழக கவர்னர் இருப்பது ஏன்?. கவர்னர் தான் பல சர்ச்சைகளுக்கு காரணம் என சிலர் கூறுகின்றனர். உயர்கல்வியின் நிலை குறித்த வருத்தமான கருத்து இது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post துணைவேந்தர் இல்லாமல் இயங்கும் சென்னை பல்கலைக்கழகம்; தமிழகத்தில் பல சர்ச்சைகளுக்கு மையமாக தமிழக கவர்னர் இருப்பது ஏன்? ப.சிதம்பரம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : CHENNAI UNIVERSITY ,chidambaram ,Chennai ,University of Chennai ,Tamil Nadu ,p. ,Senior ,Congress ,President ,Union Minister ,P. Chidambaram ,
× RELATED புல்டோசர் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்: ப.சிதம்பரம் வரவேற்பு