×

வேலூர் அருகே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தீ விபத்து: நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள்

வேலூர்: வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. பழுது நீக்கும் பணியின்போது திடீர் தீ விபத்து நேரிட்டது. வெல்டிங் தீப்பொறியால் தீ விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலூர் மாவட்டம் திருவலம் பகுதியில் அரசின் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த சர்க்கரை ஆலையில் வேலூர் பகுதியில் மட்டுமல்லாமல் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் இந்த சர்க்கரை ஆலைக்கு கரும்பை கொண்டு வருவது வழக்கம்.

சர்க்கரை ஆலையில் இன்று பராமரிப்பு பணி நடைபெற்று வந்தபோது வெல்டிங் தீப்பொறியால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை கண்டா ஊழியர்கள் அலறியடித்து அங்கிருந்து வெளியேறினர். இந்த தீ விபத்து குறித்து திருவலம் காவல்நிலையத்திற்கும், காட்பாடி தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் சர்க்கரை ஆலையில் எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வேலூர் அருகே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தீ விபத்து: நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள் appeared first on Dinakaran.

Tags : sugar ,Vellore ,Vellore Cooperative Sugar Factory ,Dinakaran ,
× RELATED வேலூர் மாநகராட்சியில் 55வது வார்டில்...