×

வேலூர் நேதாஜி மார்க்கெட் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரம்

வேலூர்: வேலூர் நேதாஜி மார்க்கெட் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் இன்று காலை தொடங்கி தீவிரமடைந்துள்ளது. வேலூர் மாநகரில் பருவமழை தீவிரமடைவதற்கு முன்பு மழைநீர், கழிவுநீர் தேங்கும் பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்வாய்கள், கழிவுநீர் கால்வாய்களை தூர்வார மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் வேலூர் கன்சால்பேட்டை, சமத் நகர், வசந்தபுரம், முள்ளிப்பாளையம், தோட்டப்பாளையம், காகிதப்பட்டறை, கலாஸ்பாளையம், சைதாப்பேட்டை, கொசப்பேட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் கழிவுநீர், மழைநீர் தேங்கும் இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் முதலில் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் தண்ணீர் தேங்கும் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணி இன்று காலை 2வது மண்டல சுகாதார ஆய்வாளர் லூர்துசாமி தலைமையில் தொடங்கியது. இதில், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கழிவுநீர் கால்வாய்களின் மூடிகளை அகற்றி கால்வாயில் உள்ள கழிவுகளையும், சேற்றையும் முழுமையாக வெளியேற்றி வருகின்றனர். இவை உடனடியாக அகற்றப்பட்டு திடக்கழிவு மேலாண்மை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘கழிவுநீர் அதிகம் தேங்கும் இடங்களில் மழை தீவிரமடைவதற்கு முன்னதாக அங்குள்ள கால்வாய்களை முழுமையாக தூர்வாரும் பணியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது’ என்றனர்.

The post வேலூர் நேதாஜி மார்க்கெட் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Vellore Netaji Market ,Vellore ,Netaji Market ,Dinakaran ,
× RELATED பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்