×

வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவுக்கு 850 பஸ்கள் இயக்கம்: போக்குவரத்து கழகம் தகவல்

சென்னை: ‘‘வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவையொட்டி, நாளை முதல் 850 சிறப்பு பஸ்கள்கள் இயக்கப்படும்’’ என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு 850 சிறப்பு பேருந்துகள் நாளை முதல் செப். 11ம் தேதி வரை இயக்கப்பட உள்ளன. இத்திருவிழாவை முன்னிட்டு இந்தாண்டு பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலமாக சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்தும் மற்றும் அரசு போக்குவரத்து கழகம் மூலமாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், பாண்டிச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஒரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு மொத்தம் 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதன் காரணமாக, பயணிகளின் வசதிக்காக தொலைதூரங்களில் இருந்து இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து வேளாங்கண்ணி செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இச்சேவையினை வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவுக்கு 850 பஸ்கள் இயக்கம்: போக்குவரத்து கழகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Velankanni Mata temple festival ,Transport Corporation ,Chennai ,Velankanni Holy Arogya Mata Temple Festival ,Tamil Nadu ,
× RELATED அரசுப்பேருந்து ஒட்டுநர்,...