×

வேதாரண்யத்தில் 100 அடிக்கு உள்வாங்கிய கடல்

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. நேற்று அதிகாலை மழை ஓய்ந்த நிலையில் அங்கு பனிப்பொழிவு மட்டும் அதிகளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 8 மணியளவில் வேதாரண்யம் சன்னதி கடலில் 100 அடி தூரத்துக்கு கடல் திடீரென உள்வாங்கியது. இந்த கடல்நீர் உள்வாங்கிய பகுதியில் 100 அடி தூரத்திற்கு சேரும், சகதியுமாகவும் காணப்படுகிறது. கடலில் மூன்று அடி முதல் நான்கு அடி ஆழம் வரை சேரும் சகதியாகவும் காணப்படுவதால் மீனவர்களும் மற்றும் பொதுமக்களும் கடலில் இறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடலில் அலைகள் இன்றி அமைதியாகவும் காணப்படுகிறது. கடல்நீர் திடீரென உள்வாங்கியுள்ளதால் மீனவர்களும், பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனர்.

The post வேதாரண்யத்தில் 100 அடிக்கு உள்வாங்கிய கடல் appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Nagapattinam ,Dinakaran ,
× RELATED வேதாரண்யம் தாலுகா தென்னடார்...