×

தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி கோர்ட் உத்தரவை செயல்படுத்தாத உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்


டெல்லி: உத்தரப்பிரதேச அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி கோர்ட் உத்தரவை செயல்படுத்தாத உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கைதிகள் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தேர்தல் நடத்தை விதி பாதிக்காது என நீதிபதிகள் விளக்கம் அளித்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காத உ.பி. மாநில சிறைத்துறை முதன்மைச் செயலாளருக்கும் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். காணொலிக்காட்சி மூலம் உச்ச நீதிமன்றத்தின் முன் உ.பி. சிறைத்துறை முதன்மைச் செயலர் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஒவ்வொரு வழக்கிலும் உத்தரவை எப்படி மதிக்காமல் இருக்கிறீர்கள் என உ.பி. சிறைத்துறை அதிகாரிக்கு நீதிபதி அபய் ஓகா கேள்வி எழுப்பினார். கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு எதையும் உ.பி. அரசு செயல்படுத்த மறுப்பது ஏன்?. கைதிகள் முன்விடுதலை தொடர்பான கோப்புகளை வாங்க மறுத்த அதிகாரிகள் யார் என தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். உ.பி. அரசு அதிகாரிகளை உச்ச நீதிமன்றம் இப்படியே விட்டுவைத்திருக்காது என்று நீதிபதி அபய் ஓகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி கோர்ட் உத்தரவை செயல்படுத்தாத உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : U. ,Supreme Court ,Delhi ,Uttar Pradesh government ,
× RELATED ஹேக் செய்யப்பட்ட உச்சநீதிமன்றத்தின்...