×

ரூ.1,800 கோடி செலவில் உ.பி. விரைவு சாலையில் சூரியஔி மின்நிலையங்கள்

லக்னோ: உத்தரபிரதேசத்தின் பண்டேல்கண்ட் விரைவுசாலை 296கிமீ நீளமுடையது. இதன் இருபுறமும் சூரியஒளி மின்நிலையங்களை அமைக்க பசுமை மாற்றத்துக்கான உலகளாவிய அமைப்பு பரிந்துரை செய்தது. இதையடுத்து பண்டேல்கண்ட் விரைவு சாலையில் ரூ.1,800 கோடி மதிப்பிலான சூரியஒளி மின்நிலையங்களை அமைக்க மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதுகுறித்து பசுமை ஆற்றல் மாற்றத்துக்கான உலகாளவிய அமைப்பின் நிர்வாகி சவுரப் கூறுகையில், “296கிமீ நீளமுள்ள பண்டேல்கண்ட் விரைவு சாலையின் இருபுறங்களிலும் 15 மீட்டர் இடைவௌியில் சூரியஔி மின்நிலையங்கள் வைக்கப்படும். இது முழு அதிவேக நெடுஞ்சாலையையும் மின்மயமாக்க முடியும்’’ என்றார்.

The post ரூ.1,800 கோடி செலவில் உ.பி. விரைவு சாலையில் சூரியஔி மின்நிலையங்கள் appeared first on Dinakaran.

Tags : Suryaui ,Power Stations ,Expressway ,Lucknow ,Bundelkhand Expressway ,Uttar Pradesh ,Global Organization for Green Change ,Dinakaran ,
× RELATED போரூர் அருகே மதுரவாயல் – தாம்பரம்...