×

வாலிபர் பலாத்காரம் செய்ததால் கர்ப்பம் திருமணமாகாத பெண்ணுக்கு வீட்டில் உறவினர்களே பிரசவம்: இறந்து பிறந்த ஆண் குழந்தை

நெல்லை: நெல்லை மாவட்டம் மானூர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண். பிளஸ் 2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் இளம்பெண் வீட்டிற்கு உறவினரான 23 வயது வாலிபர் அடிக்கடி வந்து சென்றார். யாரும் இல்லாத நேரத்தில் திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை கடந்த ஒரு ஆண்டிற்கு முன்னர் அந்த வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை கூறியே மிரட்டி அந்த வாலிபர் அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் இளம்பெண் கர்ப்பிணி ஆனார். ஊராருக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக நேற்று வீட்டிலேயே இளம்பெண்ணுக்கு உறவினர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது அவருக்கு ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இன்று அந்த இளம்பெண்ணுக்கு டிஎன்ஏ பரிசோதனை நடக்கிறது. அவரை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post வாலிபர் பலாத்காரம் செய்ததால் கர்ப்பம் திருமணமாகாத பெண்ணுக்கு வீட்டில் உறவினர்களே பிரசவம்: இறந்து பிறந்த ஆண் குழந்தை appeared first on Dinakaran.

Tags : Nellai ,Manur ,Nellai district ,
× RELATED நெல்லையில் இன்று காஸ் நுகர்வோர் குறை தீர் கூட்டம்